உடன்குடி வட்டாரத்தில் 5 கர்ப்பிணிகள் உள்பட 17 பேருக்கு கொரோனா

உடன்குடி வட்டாரத்தில் ஒரே நாளில் 5 கர்ப்பிணிகள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Update: 2020-07-27 00:40 GMT
உடன்குடி,

உடன்குடி வட்டார பகுதியில் கடந்த 2 வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பரமன்குறிச்சி என்.எஸ்.கே தெரு, அம்மன்புரம் சீர்காட்சி, மணப்பாடு குண்டல் தெரு, சுனாமி காலனி, மீனவர் காலனிகள் உள்பட ய 5 கர்ப்பிணி பெண்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் வில்லிகுடியிருப்பு -திசையன்விளை சாலையை சேர்ந்த 37 வயது பெண், செட்டியாபத்தில் 48 வயது பெண், எள்ளுவிளையில் 52 வயது பெண், உடன்குடி வடக்கு புதுத்தெருவில் 46 வயது ஆண் உட்பட 17 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் தலைமையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள், சுகாதார பணிகள் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஏற்பாட்டில் உடன்குடி நகரின் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி, நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்