2021-ல் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அறிக்கை
2021-ல் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அறிக்கை.
தென்காசி,
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. அரசு மக்களுடைய அரசாக செயல்பட்டு வருகிறது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். நான் இந்த கோரிக்கையை, முதல்-அமைச்சரின் தனி கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன் பலனாக இந்த மாவட்டம் உருவானது.
மேலும் நான் வைத்த கோரிக்கையான இப்பகுதி மக்களின் முக்கிய தேவையான 48 ஆண்டு கால கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி திட்டத்தையும் முதல்-அமைச்சர் அறிவித்து ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது எதிர்க்கட்சியினர் இந்த திட்டம் வரப்போவது இல்லை என்று தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இந்த திட்டத்தையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். கொரோனா பேரிடர் சூழ்நிலையில் இந்த அரசு மிகவும், கவனமாகவும், திறமையுடனும் செயல்பட்டு மக்களை காத்து வருகிறது. இந்த அரசு மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே 2021-ல் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.