நெல்லை- தென்காசியில் இன்று முழு ஊரடங்கு மளிகை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி மளிகை, இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் இயக்கப்பட்ட பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து, இந்த மாதம் 1-ந்தேதி முதல் அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஏற்கனவே 3 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஊரடங்கு தளர்வு இல்லாமல், முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கடைகளில் கூட்டம்
இதையொட்டி இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இன்றைக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை நேற்றே வாங்கினார்கள். நெல்லை டவுன் போஸ் மார்க்கெட் ரோடு, தற்காலிக மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் சென்றார்கள். மளிகை கடைகளிலும் பருப்பு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை கூடுதலாக வாங்கினார்கள்.
கிராமப்புற சில்லறை கடை வியாபாரிகள் நாளைய (திங்கட்கிழமை) வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை அதிகளவு வாங்கிச்சென்றார்கள். இதனால் டவுன் ரதவீதி, மாடவீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.
இதுதவிர இறைச்சி கடைகளும் இன்று மூடப்பட்டிருக்க வேண்டும். இதனால் நெல்லை டவுன் இணைப்பு சாலை, கண்டியப்பேரி உழவர் சந்தை வளாகம் மற்றும் பாளையங்கோட்டை பெல் மைதானம், பேட்டை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆடு, கோழி, மாடு இறைச்சிகளையும், மீன்களையும் வாங்கிச்சென்றனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் காய்கறி மார்க்கெட் மற்றும் மளிகைக்கடை, இறைச்சிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
போலீசார் எச்சரிக்கை
இன்று முழு ஊரடங்கு நாளில் யாரும் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய, அவசர தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். இதை மீறி யாரேனும் வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள் பயணிக்கும் வாகனமும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையான முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.