போலி இ-பாஸ் தயாரித்து விற்ற 4 பேர் கைது

போலி இ-பாஸ் தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-25 23:55 GMT
மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ்களை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஒரு கும்பல் போலி பாஸ்களை தயாரித்து அவற்றை சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பி பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த போலி இ பாஸ்களை தயாரித்து விற்பனை வந்த 4 பேர் கும்பல் சிக்கினர். போலீசார் அவர்களை சிந்துதுர்க் மற்றும் பால்கர் மாவட்டங்களில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அப்துல் கரிம் ஷேக் (வயது35), சமீர் ஷேக் (36), நூர் முகமது ஷேக் (39), வினய் பார்த்தே (36) என்பது தெரியவந்தது. கைதானவர்களில் 3 பேர் டிராவல்ஸ் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை நாளை (திங்கட்கிழமை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்