சிலம்பம் விளையாடி கலக்கும் 85 வயது மூதாட்டி உள்துறை மந்திரி நேரில் பாராட்டு

சிலம்பம் விளையாடி கலக்கும் 85 வயது மூதாட்டி உள்துறை மந்திரி நேரில் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Update: 2020-07-25 23:50 GMT
மும்பை,

சமூக வலைதளங்களில் வறுமை காரணமாக மூதாட்டி ஒருவர் சாலையில் சிலம்பம் ஆடும் காட்சி வேகமாக பரவி வந்தது. 85 வயதில் மூதாட்டி மின்னல் வேகத்தில் சிலம்பத்தை சுழற்றும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதையடுத்து பலர் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

நடிகர் சோனு சூட் கூட மூதாட்டியுடன் இணைந்து தற்காப்பு கலை பயிற்சி வகுப்பை தொடங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சாலையில் சிலம்பம் ஆடிய மூதாட்டி புனேயை சோ்ந்த சாந்தா பவார் (வயது85) என்பது தெரியவந்தது. மூதாட்டி சிலம்பம் மட்டுமின்றி கயிறில் நடத்தல் போன்ற பல்வேறு சாகசங்களிலும் தேர்ந்தவர் ஆவார். ஊரடங்கால் குடும்பத்தினர் வருவாய் இன்றி தவித்ததால், வறுமையை போக்க சிலம்ப கம்புகளுடன் சாலைக்கு வந்து உள்ளார்.இந்தநிலையில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் 85 வயதிலும் சிலம்பத்தில் கலக்கிய மூதாட்டியை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் அவருக்கு சேலை ஒன்றை பரிசாக வழங்கி, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மேலும் செய்திகள்