திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 18 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 617 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-25 05:45 GMT
திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரம் என்ற நிலையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 30-க்கும் மேல் இருந்தது. நேற்று சற்று குறைந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தாராபுரம் அட்டவணை மஜித்தெருவை சேர்ந்த 58 வயது ஆண், அனுப்பர்பாளையம் ஏ.வி.பி.ரோட்டை சேர்ந்த 52 வயது பெண், 60 வயது ஆண், குமார்நகரை சேர்ந்த 71 வயது ஆண், குன்னத்தூர் கூனம்பட்டியை சேர்ந்த 29 வயது பெண், குமார்நகரை சேர்ந்த 33 வயது பெண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 25 வயது ஆண், வெள்ளியங்காடு கே.என். நகரை சேர்ந்த 28 வயது பெண், காங்கேயம் ரோடு வி.ஜி. கார்டனை சேர்ந்த 30 வயது ஆண், குன்னத்தூர் கோபி ரோட்டை சேர்ந்த 71 வயது ஆண், கோவில்வழியை சேர்ந்த 51 வயது ஆண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ராக்கியாபாளையம் ஸ்ரீஜெய்நகரை சேர்ந்த 39 வயது ஆண், கொங்குமெயின் ரோடு அப்பாச்சிநகரை சேர்ந்த 67 வயது பெண்.

அருள்புரம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 60 வயது ஆண், பொங்கலூர் தொட்டாம்பட்டியை சேர்ந்த 39 வயது பெண், பழங்கரை அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், குமார்நகரை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் ஆவர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 617ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்