வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூரில் மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-07-25 00:34 GMT
திருவாரூர்,

அரசு நலவாரியத்தில் பதிவு செய்யாத மீனவ தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ தொழிலாளர்களுக்கு வங்கிகளில் மானியத்துடன் தொழில் கடன் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை, வருமானம் இழந்து நிற்கும் மீனவ தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாதங்கள் வழங்க வேண்டும்.

ஆண், பெண் மீனவ தொழிலாளர்களை அரசியல் கட்சி பாகுபாடின்றி மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்