திருவாரூர் மாவட்டத்தில், மேலும் ஒருவருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1,060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் தலைமையில், துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர்.
மேலும் அப்பகுதியில் பாதை அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 1,061 ஆக உயர்ந்துள்ளது.