துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சத்ரபதி சிவாஜியை அவமதித்தாரா? உதயன்ராஜே போஸ்லே எம்.பி. விளக்கம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சத்ரபதி சிவாஜியை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு உதயன்ராஜே போஸ்லே எம்.பி. விளக்கம் அளித்தார்.
மும்பை,
மராட்டிய பாரதீய ஜனதாவை சேர்ந்த உதயன்ராஜே போஸ்லே நேற்றுமுன்தினம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். அப்போது ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் பவானி, ஜெய் சிவாஜி என முழக்கமிட்டார்.
ஆனால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஜெய் பவானி, ஜெய் சிவாஜி முழக்கங்களுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், இதன் மூலம் சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டதாகவும் சர்ச்சை எழுந்து உள்ளது.
ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யாரையும் அவமதிக்கவில்லை என டுவிட்டர் பக்கத்தில் உதயன்ராஜே போஸ்லே தெரிவித்தார்.
இந்தநிலையில், இது தொடர்பாக சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான உதயன்ராஜே போஸ்லே எம்.பி. கூறியதாவது:-
நீங்கள் உறுதிமொழி எடுத்து கொள்ளலாம். ஆனால் அதில் வேறு எதையும் சேர்க்க வேண்டாம். அது அரசியலமைப்புக்கு இணங்காது என்று தான் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
ஆனால் சிலர் அதில் இருந்து ஒரு சர்ச்சையை உருவாக்குகின்றனர். சிவாஜி மகாராஜை அவர் அவமதித்து இருந்தால் நான் அமைதியாக இருந்திருக்க மாட்டேன். வெங்கையா நாயுடு எந்த தவறும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்திருந்தால் நானே அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறியிருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.