மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கோமுகி அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு
கல்வராயன்மலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்துள்ளது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை அடிவாரத்தில் 42 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் 20 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக கோமுகி அணையின் நீர் மட்டம் கடந்த 2 நாட்களில் 5 அடி அதிகரித்து தற்போது 25 அடியாக உயர்ந்துள்ளது.