விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2020-07-21 06:18 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் குமார்(வயது 45). இவர் நேற்று மாலை தனது உறவினர் சேகர் மகன் அஜித்துடன்(9) அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் தேங்கியிருந்த குட்டையில் குளிக்க சென்றார். அப்போது அஜித் குட்டையில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதைபார்த்த குமார், சிறுவனை காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குட்டைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் எடுத்து சென்ற துணி மட்டும் வெளியில் கிடந்தது.

போலீசார் விசாரணை

இதனால் அவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாமோ என்று சந்தேகமடைந்த அவர்கள், குட்டையில் இறங்கி தேடிப்பார்த்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்