திருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருவாரூர்,
முன்னாள் எம்.பி. முருகையன் படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட கோரி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகி அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள் முத்தழகன் (நாகை), அசோக் (கரூர்), உத்திராபதி (தஞ்சை), நகர செயலாளர் பாலச்சந்தர், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்.பி முருகையன் படுகொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.