பெற்றோரின் மருத்துவ செலவுக்கு என்று கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி திருமண இணையதளம் மூலம் பழக்கமானவருக்கு வலைவீச்சு
பெற்றோரின் மருத்துவ செலவுக்கு என்று கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. திருமண இணையதளம் மூலம் பழக்கமானவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் சாரா(வயது 29 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சாரா தனது புகைப்படம், மற்றும் தன்னை பற்றிய விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராவின் செல்போன் எண்ணுக்கு அமீன் இஸ்லாம் என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திருமண இணையதளத்தில் உங்கள் புகைப்படத்தை பார்த்ததாகவும், உங்களை பிடித்து இருப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சாராவும், அமீனும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி உள்ளது. இதனால் தனக்கு பணம் தந்து உதவும்படி சாராவிடம், அமீன் கேட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் அமீன் கூறிய வங்கிக்கணக்கிற்கு சாரா ரூ.10 லட்சம் வரை அனுப்பி வைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாராவிடம், அமீன் பேசாமல் இருந்து வந்து உள்ளார்.
இதனால் அவரிடம் பேச சாரா முயன்று உள்ளார். ஆனால் சாராவின் அழைப்பை அமீன் நிராகரித்து வந்ததாக தெரிகிறது. அப்போது தான் பெற்றோரின் மருத்துவ செலவுக்கு என்று கூறி தன்னிடம் ரூ.10 லட்சத்தை வாங்கி அமீன் மோசடி செய்தது சாராவுக்கு தெரியவந்தது. அவர் இதுகுறித்து சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீனை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதுபோல பெங்களூரு எம்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்த 56 வயது நபர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகளின் புகைப்படம், விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்து இருந்தேன். இந்த நிலையில் எனது மகளின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் தனது பெயரை கெல்வின் ரோமஸ் என்று அறிமுகம் செய்தார். மேலும் தான் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் எனது மகளிடம் கூறி இருந்தார்.
இந்த நிலையில் எனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கெல்வின் உங்களுக்கு அமெரிக்காவில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த பரிசு பொருளை அனுப்பி இருப்பதாகவும், தான் கூறும் எண்ணுக்கு ரூ.1 லட்சம் செலுத்தி அந்த பரிசை பெற்று கொள்ளவதாகவும் கூறி இருந்தார். இதனால் எனது மகளும் கெல்வின் கூறிய வங்கிக்கணக்குக்கு ரூ.1 லட்சத்தை செலுத்தினார். ஆனால் கெல்வின் கூறியபடி எனது மகளுக்கு பரிசு எதுவும் வரவில்லை. எனது மகளை ஏமாற்றி கெல்வின் ரூ.1 லட்சத்தை மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.