நாசரேத் கிறிஸ்தவ ஆலயத்தில் பரபரப்பு: 182 அடி உயர கோபுரத்தில் ஏறி குடும்பத்துடன் ஊழியர் போராட்டம் பணி இடைநீக்கம் செய்ததற்கு எதிராக தற்கொலை மிரட்டல்
நாசரேத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் 182 அடி உயர கோபுரத்தில் ஏறி ஊழியர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாசரேத்,
தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின்கீழ் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் கட்டுப்பாட்டில் நாசரேத் தூய யோவான் பேராலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த பேராலயத்தின் சேகர அலுவலகத்தில் அகஸ்டின் (வயது 40) என்பவர் 17 ஆண்டுகளாக எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது அவரை தலைமை குரு அண்ட்ரூ விக்டர் ஞானொளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பணி இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அகஸ்டின் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை 8 மணியளவில் அவர் தனது மனைவி கிறிஸ்டி (38), மகன்கள் ஜான் (10), கேமரர் (8) ஆகியோருடன் நாசரேத் பேராலயத்துக்கு வந்தார். அங்குள்ள 182 அடி உயர ஆலய கோபுரத்தில் அவர்கள் ஏறி உச்சிக்கு சென்று திடீர் போராட்டம் நடத்தினர். அங்கு நின்று கொண்டு மண்எண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, ஏரல் தாசில்தார் அற்புதமணி மற்றும் போலீசார், சாத்தான்குளம் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கீழே நின்றபடி கோபுரத்தின் உச்சியில் இருந்த அகஸ்டினிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து மதியம் 12 மணியளவில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, பணி இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கான ஆணையை பேராலய தலைமை குருவானவர் கொடுத்தார். ஆனால் அகஸ்டின், பேராயர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறி கோபுரத்தில் இருந்து கீழே இறங்காமல் போராட்டத்தை தொடர்ந்தார். இதனால் அங்கு மேலும் பரபரப்பு காணப்பட்டது.
சிறிது நேரத்துக்குப்பின் பேராலய தலைமை குருவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அடுத்த கோரிக்கையை வைத்தார். இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அங்கு வந்து அகஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து குருவானவரை நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் சபைக்கு மாற்றி திருமண்டலம் மூலம் உத்தரவு வந்தது.
இதுபற்றி அகஸ்டினிடம் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்தினருடன் கோபுரத்தில் இருந்து மாலை 5 மணி அளவில் கீழே இறங்கி வந்தார். சுமார் 9 மணி நேரம் அவர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.