பாஸ்போர்ட் பெற குற்ற வழக்குகளை மறைத்ததாக வழக்கு - மந்திரி விஜய் வடேடிவாருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பாஸ்போர்ட் பெற குற்ற வழக்குகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மந்திரி விஜய் வடேடிவாருக்கு மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை,
விஜய் வடேடிவார் கடந்த 2001-ம் ஆண்டு நாக்பூரில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தார். அப்போது அவர் தன் மீது நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை வேண்டுமென்றே தெரிவிக்காமல் மறைத்து விட்டார். அந்த நேரத்தில் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது.
பின்னர் 2007-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த போதும் அவர் குற்ற வழக்குகளை மறைத்து விட்டார்.
இரண்டாவது விண்ணப்பத்திலும் அவர் தன் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர் பாஸ்போர்ட் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது. எனவே மந்திரி விஜய் வடேடிவாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நாக்பூர் போலீஸ் கமிஷனர் மற்றும் மும்பை ஒர்லி, நாக்பூரில் உள்ள பாஸ்போர்ட்டு அலுவலகங்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ.சந்தூர்கர், அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மந்திரி விஜய் வடேடிவார், மாநில உள்துறை, நாக்பூர் போலீஸ் கமிஷனர், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.