குழித்துறையில் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவர் தற்கொலை
குழித்துறையில் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை,
குழித்துறை முழமூட்டுவிளையை சேர்ந்தவர் ரசலையன் (வயது 72), திருமணம் ஆகாதவர். இவருக்கும் பாலவிளையை சேர்ந்த ஜாண்சனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஜாண்சன் படுகொலை செய்யப்பட்டார். இதில் முதல் குற்றவாளியாக ரசலையனும், இரண்டாவது குற்றவாளியாக அவருடைய தம்பி விஜயகுமாரும் சேர்க்கப்பட்டனர்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ரசலையனுக்கும், விஜயகுமாருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து ரசலையன் தப்பியோடி தலைமறைவானார்.
தூக்கில் பிணம்
இந்தநிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ரசலையனின் உடல் தூக்கில் தொங்கியது. தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்தன.
கொலை வழக்கில் தலைமறைவான ரசலையன் கடந்த பல ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
45 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்
அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் 45 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று முன்தினம் பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சொந்த ஊரான குழித்துறை முழமூட்டுவிளைக்கு வந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு செல்லாமல் அருகில் உள்ள தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.