கோவையில் பரபரப்பு பெரியார் சிலை அவமதிப்பு பாரத்சேனா நிர்வாகி கைது
கோவையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதித்த பாரத் சேனா அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
போத்தனூர்,
கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றியிருப்பதை பார்த்து பெரியார் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பெரியார் அமைப்பினரும், தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்பினரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து பெரியார் சிலை மீது ஊற்றப்பட்ட காவி நிற சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இதற்கிடையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பெரியார் அமைப்பினரும், தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
அவர்களிடம், கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், தெற்கு பகுதி உதவி கமிஷனர் செட்ரிக் இம்மானுவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 153 (கலகம் செய்ய தூண்டுதல்), 153 (ஏ)(மத, இனம், மொழி, சாதி விரோத உணர்ச்சியை தூண்டுதல், 504 (திட்டமிட்டு அமைதியை சீர்குலைத்தல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பாரத் சேனா நிர்வாகி கைது
இதில், நேற்றுமுன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமிகள் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றியது தெரியவந்தது. உடனே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் சிலையை அவமதிப்பு செய்த மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் அருண்கிருஷ்ணன்(வயது 21) என்பவர் சரண் அடைந்தார். விசாரணையில் அவர் போத்தனூர் மேட்டூர் அண்ணா நகரை சேர்ந்தவர் என்பதும், பாரத்சேனா அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளராக இருப்பதும் தெரியவந்தது.
சிறையில் அடைத்தனர்
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பர் கூட்டம் யூ.டியுப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு செய்து வீடியோ பதிவிட்டுள்ளனர். அதை கண்டிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டதும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருண் கிருஷ்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவமதிப்பு செய்யப்பட்ட சிலையை சுத்தம் செய்து பெரியார் அமைப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அதுபோன்று கோவையில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.