நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு கடன் கேட்டு காத்திருக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
நகைக்கடன்
நகைக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் ஏற்கனவே இருந்த நடைமுறையிலேயே, தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி, மாநகர செயலாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு
திருவையாறில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் பழனி அய்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ராம், ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பூதலூர் தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதேபோல் பூதலூர் அருகே உள்ள முல்லைக்குடி தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.