வேலூர் மாவட்டத்தில், ஒரேநாளில், கோர்ட்டு ஊழியர்கள், டாக்டர் உள்பட 71 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,672 ஆக உயர்வு

வேலூர் கோர்ட்டு ஊழியர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர், நர்சு உள்பட 71 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,672 ஆக உயர்ந்தது.

Update: 2020-07-17 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு சளிமாதிரி சேரிக்கப்பட்டு, அதன் முடிவுகள் வரும்வரை வீடுகளில் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. இதில், 37 பேருக்கு சளிமாதிரிகள் சேகரிக்கப் பட்டன. அதன் முடிவுகள் நேற்று வந்ததில் 2 கோர்ட்டு ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் பணிபுரிந்த கோர்ட்டிற்கு கிருமிநாசினி தெளிக்கப் பட்டது. மேலும் கோர்ட்டில் பணிபுரிந்த அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டனர். மேலும் அண்ணாசாலையில் உள்ள நீதிபதி குடியிருப்பிலும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர், நர்சு, ஊழியர்கள் என 5 பேர் கொரோனாவினால் பாதிக் கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பத் தினர், உடன் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் தோட்டப் பாளை யத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயது பெண்குழந்தை, 5 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேருக்கும், குடியாத்தம் எம்.ஜி.ஆர்.நகரில் 2 வயது ஆண்குழந்தை, தோட்டப்பாளையத்தில் 3 வயது ஆண்குழந்தை, சைதாப்பேட்டையில் 82 வயது முதியவர், வேலூர் மாநகராட்சி பகுதியில் 27 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 71 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3,672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரக்கோணம், வாலாஜா, நெமிலி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,942 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வுக்கு 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர். மேலும் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்