ரேஷன்கடையில் நிவாரணம் வாங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் வந்தவர் மயங்கி விழுந்தார்
ரேஷன்கடையில் நிவாரணம் வாங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் வந்தவர் திடீரென மயங்கி விழுந்தார்.
திருமங்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 59). இவர் நேற்று திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சைக்கிளில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயக்கம் தெளிய வைத்து விசாரித்தனர்.
இவர் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இதனால் மதுரை மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது விடுமுறையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விட்டார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். இந்தநிலையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் ரூ.1000 மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டதை அறிந்த செல்லத்துரை அதை வாங்க மதுரைக்கு புறப்பட்டார். வாகன போக்குவரத்து எதுவும் தற்போது இல்லை. இதனால் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் வந்ததால் மிகவும் சோர்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதைதொடர்ந்து செல்லத்துரை, திருமங்கலத்தில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு அவர் மூலம் மதுரைக்கு காரில் சென்று ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் கேட்டார். ஆனால் நிவாரண தொகை கடந்த மாதமே கொடுக்கப்பட்டு விட்டது. ரேஷன் பொருட்கள் மட்டும் வாங்கிச் செல்லுமாறு கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ரூ.1000 நிவாரணம் கிடைக்காததால் அவர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டார்.