கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 1979 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 380 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
2,049 ஆக உயர்வு
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,979-ல் இருந்து 2,049 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.