அரசு மேல்நிலைப்பள்ளியில் 10,12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் அமைச்சர் வழங்கினார்

திருவாரூர் ஒன்றியம்் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன.

Update: 2020-07-17 01:23 GMT
திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியம்் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஒன்றியக்குழு தலைவர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தங்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், கலியபெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, பள்ளி தலைமையாசிரியர் ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்