காமராஜர் பிறந்தநாள் விழா பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

காமராஜர் பிறந்தநாள் விழா பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

Update: 2020-07-16 06:01 GMT
பெரம்பலூர்,

கொரோனா ஊரடங் கினால் பள்ளிகள் மூடப் பட்டுள்ளதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த காமராஜர் உருவப்படத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் நேற்று பள்ளிகளுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 விலையில்லா பாடப்புத்தகங்களுக்கு வாங்க வந்திருந்த மாணவ- மாணவிகள் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதே போல் அரியலூர் மாவட்டம் உடையார் பாளை யம் வடக்கு நடுநிலைப்பள்ளி யில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட் டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். அப் போது காமராஜரின் உருவப் படத்துக்கு மாணவ- மாணவி கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கங்கா தேவி தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது. ஆசிரியர் லெனின் வரவேற்றார். மாணவ- மாணவிகள் காம ராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஆசிரியர்கள் மணிவண் ணன், செல்வராஜ் கலந்து கொண்டனர். மேலும் விழா வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிர மணியன் கலந்து கொண்டு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி னார். முடிவில் தமிழாசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார். அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில், சிறப்பு விருந்தினராக ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முகம்மது இத்ரீஸ் கலந்து கொண்டு காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும், இளை ஞர்களுக்கு விளை யாட்டு உபகரணங்களையும் வழங்கி னார். இதேபோல் ஆண்டி மடம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்