மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வாடகை பாத்திர தொகுப்பு அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கையை அடுத்த இடையமேலூர், மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வாடகை பாத்திர தொகுப்பு அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2020-07-15 06:25 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த இடையமேலூர் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாடகை பாத்திரங்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மகளிர் குழுக்களுக்கு வாடகை பாத்திரங்கள் கொண்ட தொகுப்பை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். அதன் பின்னர் சிவகங்கையை அடுத்த சாலூர், பாப்பாகுடி, கீழச்சாலூர், இடையமேலூர், ஈசனூர், காந்திநகர், நாலுகோட்டை மற்றும் சோழபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கோமதிதேவராஜ், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கருணாகரன், சசிக்குமார், பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனியம்மாள், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ச்சுனன், சிவதாசு, மணிகண்டன், சேவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சக்கந்தி ஊராட்சி, மாங்குடி தெற்குவாடி ஊராட்சியில் சமுதாய கூடம், புதிதாக நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை ஆர்.டி.ஓ. சிந்து, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை குழு தலைவர் மானாகுடி சந்திரன், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், பழனியம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கருணாகரன், சசிக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோமதிமணிமுத்து, ராஜலெட்சுமிஅழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்