கடலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.;

Update: 2020-07-15 03:41 GMT
கடலூர்,

 கலெக்டர் உத்தரவின்  பேரில் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.

நெடுஞ்சாலைத்துறையின் கடலூர் கோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தெய்வநாயகி ஆகியோரது ஆலோசனையின் பேரில் கடலூர் உதவி பொறியாளர் கவிதா தலைமையில் சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட விளம்பர மற்றும் பெயர் பலகைகளை அகற்றி, வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

மேலும் செய்திகள்