மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 62 பேர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 31 வயதுடைய பெண் டாக்டர் ஒருவரின் கணவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த பெண் டாக்டருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதேபோல, வெங்கமேடு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண்ணிற்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 2 ஆண்கள் பூரண குணம் அடைந்ததால் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த 32 ஆண்கள், 18 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 52 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆண்கள், 1 பெண் என 3 பேரும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 ஆண், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 ஆண், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 1 ஆண், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 1 ஆண், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 1 பெண் உள்பட மொத்தம் 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லடை ஊராட்சியை சேர்ந்த இடையப்பட்டி பகுதியில் வசிக்கும் 31 வயது வாலிபர் ஒருவர் மணப்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருகிறார். அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் ராமசாமி, தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் அந்த வாலிபர் வசித்த பகுதிக்கு சென்று ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினர். அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோகைமலை பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சின்னரெட்டியப்பட்டி அருகே தோகைமலை எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இ-பாஸ் இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது குளித்தலை தாசில்தார் முரளிதரன், மண்டல தாசில்தார் இந்துமதி, தோகைமலை வருவாய் அதிகாரி நீதிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.