திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 43 பேருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர் மாவட்டத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் இந்த பரிசோதனை நடைபெறுகிறது.

Update: 2020-07-12 22:47 GMT
திருப்பூர்,

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவர்கள் வெளிபகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்