வீரபாண்டி நொய்யல் ஆற்றின் கரையில் குவியும் சாயக்கழிவுகள்

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் டையிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான டையிங் நிறுவனங்களில் நொய்யல் கரையோரம் செயல்படுகிறது.

Update: 2020-07-11 22:31 GMT
வீரபாண்டி,

பனியன் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் நொய்யல் கரையோரம் இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் வீரபாண்டி சுற்றியுள்ள பகுதிகளில் கரையோரங்களில் சாயக்கழிவுகள், பனியன் கழிவுகளும் கலந்து கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. விரைவில் நொய்யல் கரையோரம் சாய கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஓடைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தூர்வாரி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நொய்யல் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்