பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு
கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மணிகண்டன். ஆட்டோ டிரைவர்.
பாவூர்சத்திரம்,
கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மணிகண்டன். ஆட்டோ டிரைவர்.
கடந்த 4-ந் தேதி தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக்கொண்டு பாவூர்சத்திரம் அருகே பூவனூர் ஊருக்கு சென்றுவிட்டு பின்னர் வெய்க்காலிப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திரவியநகர் அருகே நாய் ஒன்று குறுக்கே சென்றபோது மணிகண்டன் ஆட்டோவை பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் மணிகண்டன் பலியானார்.
இதில் பயணம் செய்த மேலும் 4 பேர் காயமடைந்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்களில் வெய்க்காலிப்பட்டி பழைய வேதக்கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி என்பவருடைய மனைவி அன்பு பொன்னுத்தாய்(வயது 47) என்பவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பலனளிக்காமல் அவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.