பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2020-07-11 22:30 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரர் அழகுமுத்துக்கோன்

விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெரியசாமி உடனிருந்தார்.

இதே போல் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ்மூர்த்தி மற்றும் மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-தே.மு.தி.க.

தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அழகுமுத்துக்கோன் படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த மணி தலைமையில் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதே போல் கொரோனா ஊரடங்கால் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தங்களது அலுவலகங்களில் அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழாவை நடத்தினார்கள்.

பணகுடியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பஸ்நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பணகுடி யாதவர் இளைஞர் அணியினரும் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பஸ்நிலையத்தில் யாதவ சமுதாய இளைஞர்கள் சார்பில் வீரர் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அழகுமுத்துக்கோன் வாரிசு விஷ்ணு, சங்கை குரு வசந்த், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா, காங்கிரஸ் நகர தலைவர் சமுத்திரம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சங்கர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நகர யாதவர் சமுதாய இளைஞர் அணி தலைவர் செந்தூரபாண்டி சேர்வை, உறுப்பினர்கள் சிவா, ரவி, செல்வம், முருகன் கிருஷ்ணன், தினேஷ்குமார் மற்றும் யாதவ சமுதாய நாட்டாண்மை அசோக் மதி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்