தாராவியில் வாலிபரை கொலை செய்த 4 நண்பர்கள் கைது

தாராவியில் வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-07-10 22:15 GMT
மும்பை, 

தாராவியில் வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலை வீடியோ

மும்பை தாராவி சுபாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் கவுசிக்(வயது17). இவர் கடந்த புதன்கிழமை கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இது குறித்து தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வாலிபரின் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

கவுசிக் சேலை கட்டி நடனமாடியதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். இதையறிந்த கவுசிக் அந்த வீடியோவை செல்போனில் இருந்து அழிக்குமாறு நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால் நண்பர்கள் வீடியோவை அழிக்கவில்லை.

4 பேர் கைது

எனவே அவர் சம்பவத்தன்று இதுகுறித்து தனது மாமாவிடம் கூற அருகில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் மாமா இல்லை. இந்தநிலையில் கவுசிக் திரும்பி வந்தபோது அவரது நண்பர்கள் 4 பேர் அவரை வழிமறித்து உள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வீடிேயா தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவன் கத்தியால் கவுசிக்கின் தோள்பட்டையில் குத்தினான். பின்னர் 4 பேரும் தப்பியோடிவிட்டனர்.

இந்தநிலையில் ரத்தம் அதிகளவு வெளியேறியதால் கவுசிக் பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுசிக்கை கொலை செய்த 3 மைனர் வாலிபர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். மைனர்கள் 3 பேரும் டோங்கிரி சிறுவர்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்