டி.கல்லுப்பட்டி அருகே கண்மாயில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு
டி.கல்லுப்பட்டி அருகே கண்மாயில் பழமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
பேரையூர்,
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே வி.சத்திரப்பட்டி கண்மாயில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் முனீஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில் கள ஆய்வு செய்தனர். அப்போது கண்மாயில் கலைநுட்பத்துடன் கூடிய 3 சதி கற்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது, இந்த கற்கள் 16-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை. இறந்து போன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறிய பின் அவர்கள் நினைவாக செதுக்கப்படும் சிற்பம் தான் சதி கல் எனப்படுகிறது. உடன் கட்டை ஏறி இறந்த பெண்களை தெய்வமாக போற்றி வணங்கி வந்துள்ளனர்.
இந்த கற்கள் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டவையாக உள்ளது. இந்த சிற்பங்கள் நாயக்கர் ஆட்சியின் தொடக்க காலமாக உள்ளது. அப்போது உள்ள கலாசார பண்புகளை விளக்கி இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன என்றார்.