கலவை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கலவை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-07-10 01:21 GMT
கலவை, 

கலவை தாலுகா நல்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இச்சாலையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தார்சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்