ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா தரைப்பாலத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா தரைப்பாலத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2020-07-10 01:14 GMT
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பக்கிரிதக்கா அருகே புதிதாக ரெயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஜோலார்பேட்டை பகுதிக்குட்பட்ட கட்டேரி, அம்மையப்பநகர், இடையம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தின் வழியாக சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் மோட்டார்சைக்கிள்கள், கார், பஸ், லாரி ஆகிய வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும். மேலும் அங்கு நிரந்தரமாக மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்