பொன்னேரி அருகே கொரோனாவால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள அருமந்தை கூட்டு சாலை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2020-07-10 00:14 GMT
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள அருமந்தை கூட்டு சாலை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

அவரது உடலை எரியூட்டுவதற்காக பூதூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.

சுடுகாட்டில் குழி தோண்ட பொக்லைன் எந்திரம் வழங்க யாரும் முன்வரவில்லை. அவரது உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுகாதாரத்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை எரிப்பதால் தொற்று பரவ வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தனர். பின்னர் அருமந்தை சுடுகாட்டில் மூதாட்டியின் உடல் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்