உத்திரமேரூர் அருகே தீக்குளித்து தற்கொலை செய்த பெண்ணுக்கு கொரோனா

உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

Update: 2020-07-10 00:11 GMT
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி அந்த பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்