போலீசார் கேட்டுக்கொண்டதால் தொழிலாளியிடம் பறித்த செல்போனை ஒப்படைத்த கொள்ளையர்கள்
போலீசார் கேட்டுக்கொண்டதால் தொழிலாளியிடம் பறித்த செல்போனை கொள்ளையர்கள் ஒப்படைத்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை பெரம்பூர் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். தச்சுத்தொழிலாளி. இவர், நுங்கம்பாக்கத்தில் வேலையை முடித்துவிட்டு அயனாவரம் பில்கிங்டன் சாலை வழியாக நடந்து வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி சண்முகம் தெரிவித்தார்.
உடனே போலீசார், சண்முகம் பறிகொடுத்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தனர். போனில் பேசிய கொள்ளையர்களிடம், செல்போனை திருப்பி தரும்படி கேட்டு போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து போலீசிடம் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் செல்போனை பெரம்பூர் பஸ் டிப்போ அருகில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் முருகன் என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். அங்கு சென்ற போலீசார், முருகனிடம் செல்போனை வாங்கி சண்முகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.