இன்று 115 மில்லி மீட்டர் மழை பெய்யும் கர்நாடக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

கர்நாடக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று 115 மில்லி மீட்டர் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-09 22:30 GMT
மங்களூரு,

கர்நாடக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று 115 மில்லி மீட்டர் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் அரபிக்கடலிலும் சீற்றம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் நாளை (அதாவது இன்று) முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (இன்று) அதிகபட்சமாக 115 மில்லி மீட்டர் மழை பெய்யும். நாளை மறுநாள் (நாளை) முதல் 4 நாட்களுக்கு சராசரியாக 65 மி.மீ. மழை பெய்யும். மங்களூரு, கார்வார் பகுதிகளில் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். 3 முதல் 4 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வரும். மணிக்கு 43 முதல் 57 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்