கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-09 05:25 GMT
பெரம்பலூர், 

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தினர், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் பொரு ளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வ குமார் முன்னிலை வகித் தார். செயலாளர் ஆனந்த ராஜ் கண்டன உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு 108 ஆம்புலன்சு தொழிலாளர்களுக்கு ஆண்டு விடுப்புக்கு வழங்கிய தொகையை, ஆம்புலன்சை இயக்கும் தனியார் நிறுவனம் உடனடியாக வழங்க வேண் டும். கரூர் மாவட்டத்தில் நடந்த ரேடியேட்டர் ஊழலை மறைக்க விசா ரணையே நடத்தாமல், நடத்தியது போல் போலி ஆவணம் தயாரித்து சங்கத் தின் மாநில பொருளாளர் உள்பட 6 தொழிலாளர் களிடம் சட்ட விரோதமாக இறுதி விளக்கம் கோரும் அறிவிப்பை நிறுவனம் திரும்ப பெற்று, அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். 108 ஆம்புலன்சு நடத்தி வரும் தனியார் நிறுவனம் தொழிலாளர் மற் றும் தொழிற்சங்க விரோத போக்கினை கைவிட வேண் டும். தொழிலாளர்களுக்கு சென்னைக்கு அனுப்பியுள்ள பணியிட மாறுதலை உட னடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் உறுப்பினர் பாபு தலைமை யில் உறுதி மொழி எடுக் கப்பட்டது.

மேலும் செய்திகள்