குவைத், பக்ரைன் நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 6 பேருக்கு கொரோனா

குவைத், பக்ரைன் நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-07-08 01:12 GMT
ஆலந்தூர், 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில் மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய் உள்பட 15 நாடுகளில் சிக்கிய 25 ஆயிரத்து 560 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவபரிசோதனை செய்ததில், 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 240 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், சிறப்பு விமானங்களில் குவைத்தில் இருந்து வந்த 4 பேருக்கும், பக்ரைன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவர் என 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 448 ஆக உயர்ந்தது.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 69 ஆயிரத்து 687 பேரில், 149 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் விமானத்தில் வந்து இறங்கிய 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் எண்ணிக்கை 153 பேராக உயர்ந்தது.

மேலும் செய்திகள்