ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-06 23:50 GMT
கன்னிவாடி, 

ரெட்டியார்சத்திரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ரெட்டியார்சத்திரம், மாங்கரை, அம்மாபட்டி, சில்வார்பட்டி, கே.புதுக்கோட்டை, சுக்காம்பட்டி, மூலச்சத்திரம், புளியராஜக்காப்பட்டி, அணைப்பட்டி, கதிரையன்குளம், முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, பங்காருபுரம், தாதன்கோட்டை, எல்லப்பட்டி, ஸ்ரீராமபுரம், அரசமரத்துப்பட்டி, நீலமலைக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ரெட்டியார்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேடசந்தூர் மற்றும் எரியோடு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி எரியோடு, நாகையன்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனார்கோட்டை, குளத்தூர், கொசவபட்டி, சூடாமணிபட்டி மற்றும் வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரபட்டி, பூத்தாம்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், அம்மாபட்டி, பூவாய்பாளையம், குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கருப்பையா, சரவணக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்