குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் இன்று முதல் வினியோகம்

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2020-07-06 04:19 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வருகிற 10-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க தமிழக முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதற்கான டோக்கன்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ந் தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று தினமும் முற்பகல் 100, பிற்பகல் 100 என 200 டோக்கன்கள் வினியோகிக்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே முககவசம் அணிந்து ரேஷன் கடைக்கு வந்து வட்டத்தில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கும், நேரில் வந்து பொருட்களை பெற்று செல்ல இயலாத முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் நேரில் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்