கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: வேடசந்தூர் சிறையில் இருந்த கைதிகள் திண்டுக்கல்லுக்கு மாற்றம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேடசந்தூர் சிறையில் இருந்த கைதிகள் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2020-07-06 00:27 GMT
வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற 15 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 கைதிகளையும் திண்டுக்கல் சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, கிளைச்சிறையில் இருந்த கைதிகள் 15 பேரும் பாதுகாப்பாக வெளியே அழைத்துவரப்பட்டு, சமூக இடைவெளிவிட்டு தரையில் அமர வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, திண்டுக்கல் கொண்டு செல்லப்பட்டனர். முழு பாதுகாப்பு கவசம் அணிந்து போலீசார், கைதிகளை அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேடசந்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் திண்டுக்கல் சிறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்