திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 513 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூரில் ஒருவர், மன்னார்குடியில் 4 பேர், வலங்கைமானில் 5 பேர், கோட்டூரில் ஒருவர் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.