தென்காசி மாவட்டத்தில் 136 இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டத்தில் 136 இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் 136 இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக்கூடாது. 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி தினசரி சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர்கள் சங்க வட்டார செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். இதேபோன்று தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்க வட்டார தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் தாணுமூர்த்தி மற்றும் நடராஜன் வக்கீல் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
136 இடங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியில் நின்றனர். இதுபோன்று தென்காசி வட்டாரத்தில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 136 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.