5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-02 23:37 GMT
சென்னை,

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேவராஜ், அப்துர் ரகுமான், இளையா, தமிழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினார்கள்.

மேலும் செய்திகள்