நெல்லை மாநகராட்சி பகுதியில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்- ஆணையாளர் கண்ணன் வேண்டுகோள்

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் குழுவின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

Update: 2020-06-27 23:30 GMT
நெல்லை, 

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் குழுவின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், “நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 400 பலவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. மீதி உள்ள மரக்கன்றுகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து நடவுவதற்கு முன்வர வேண்டும்“ என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிர்வாக இயக்குனர் நாராயண நாயர், மாநகராட்சி பொறியாளர்கள் பாஸ்கர், நாராயணன், மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்