புதிதாக 39 பேருக்கு கொரோனா புதுவையில் பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
புதுவையில் நேற்று புதிதாக 39 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இவர்களை சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது.
புதுச்சேரி,
புதுவையில் 592 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 32 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களை சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 306 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் இருந்து 187 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் முக கவசம் தயாரிக்கும் கம்பெனி ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். கடந்த சில நாட்களாக சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் நாள்தோறும் சராசரியாக பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.
பட்ஜெட் தாக்கல் எப்போது?
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது. அங்கு உள்ள நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள். அடுத்த கட்டமாக தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பேசி வருகிறோம். அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதமும் முழு சம்பளம் வழங்கப்படும்.
கொரோனா பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை. பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்குவதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ஜூலை மாதம் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. காரைக்கால், மாகி பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு குறித்து அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது, ‘காரைக்காலில் புதிதாக 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 11 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுவையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்றார்.