நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-06-23 22:15 GMT
தென்காசி, 

கொல்கத்தா துறைமுகத்திற்கு இருந்த நேதாஜி பெயரை மத்திய அரசு மாற்றியதை கண்டித்து தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் குமார் பாண்டியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முருகேசன், செய்தி தொடர்பாளர் தங்கமணி, தென் மாவட்ட தலைவர் பூசை துரை, தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன் பாண்டியன் உள்பட 29 பேர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்