நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி சாவு

நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-06-22 05:54 GMT
சோழவந்தான், 

மதுரை வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆகாஷ்(வயது 18). இவர் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் உள்ள சித்தி பிரமிளா வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ளார். நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆகாஷ்க்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

இதனால் குளித்து கொண்டிருக்கும்போது ஆகாஷ் அங்குள்ள ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், ஆகாஷின் சித்தி வீட்டில் தகவல் தெரிவித்தனர்.

இவர்களின் தகவலின் பேரில் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வைகை ஆற்றில் மூழ்கிய ஆகாசை தேடினர். பின்னர் அவர்கள் ஆகாசை பிணமாக மீட்டனர்.

இதைதொடர்ந்து அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்